மகனுக்கு விசித்திர பெயர் வைத்த எலான் மஸ்க்!

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தமக்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மூன்றாவது பிள்ளை பிறந்திருப்பதாக உறுதிசெய்திருக்கிறார்.

உடன்பிறந்தவர்களைப் போன்று அந்தப் பிள்ளைக்கும் விசித்திரமான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அவர்களது மகனின் பெயர் ‘Tau Techno Mechanicus’ என தெரியவந்துள்ளது. இது குறித்து 52 வயது மஸ்க் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

X சமூக ஊடகத்தின் நிறுவனர் இலோன் மஸ்க்கிற்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மொத்தம் 3 பிள்ளைகளாகும். அவர்களது மூன்று வயது மகன் ‘X’ என்றும் 1 வயது மகள் ‘Y’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

SpaceX, Tesla ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான மஸ்க்கிற்கு மொத்தம் 11 பிள்ளைகள் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *