பிளாஸ்டிக் சர்ஜரியால் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை!
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா 43 வயதில் உயிரிழந்துள்ளாது.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ந்துள்ளார்.
இதனால் சில்வினா லூனா வாரத்திற்கு சுமார் 3 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சில்வினாவின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த அனிபால் லாடாக்கி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.