கூகுள் மேப்பில் திடீரென தெரிந்த மர்ம கதவு!

கூகுள் மேப்பினால் அண்மையில் அண்டார்டிகாவில் மர்மமான ரகசிய கதவு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளவாசிகள் பலரும் இந்த கதவானது 2 ஆம் உலகப்போருக்கு பின் ஹிட்லர் தப்பிச் சொல்வதாக கூறப்படும் கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாமென குறிப்பிட்டு வருகின்றனர்.
இரண்டாம் உலகப்போரின் போது நாசிக்களால் கட்டப்பட்ட இரகசியமான ஒரு பதுங்கும் இடம் என்று பலர் இதனை குறிப்பிடுகின்றனர்.
மேலும் சிலரோ ஒரு படி மேலே போய் இது ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நாம் கண்டுபிடிக்காத பல்வேறு உயிரினங்கள் அங்கு இருக்கலாம் என்றும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
1930 களில் ஹிட்லரின் நாசிப்படைகள் அண்டார்டிகாவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மேலே கூறப்படும் சில கருத்துக்கள் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக பலரும் நம்புகிறார்கள். இந்த இடமானது நாசிகளால் கைவிடப்பட்ட ஒரு தளம் என்றும் கூறி வருகின்றனர்.
வேறு சிலரோ அது பனியில் காணப்படும் சிறு துளை தான் என்றும், பெரிதாக எதையும் யோசிக்க தேவையில்லை என்றும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறி இந்த பதிவானது மிகப் பெரும் அளவில் வைரலாகி வருகிறது.
“குறித்த இடத்தில் எங்கேயோ நாசிக்களின் தளம் இருக்கிறது மற்றும் ஒருவரோ “அண்டார்டிகாவில் இதுவரை நாம் கண்டறியாத, வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ளாத ஒரு இனம் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு விடயத்தையும் பற்றியும் கவலை கொள்ளாத ஒரு இனமாக வாழ்ந்து வருவது என்பது மிகவும் வியக்கத்தக்க ஒரு வாழ்க்கை” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *