கிழக்கு ஆளுநரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்!

 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான வீதியை வழிமறித்து இன்று (28) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை கட்டுமானங்கள்
கிழக்கு ஆளுநரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள் (படங்கள்) | Protest Over The Ban On Trincomalee Viharai

இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது.

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சிறிலங்கா அதிபரினால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையிலேயே இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *