திருமணத்தின் பின் மனம் திறந்த லாஸ்லியா!

நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றிய நிலையில் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில் பேசினார்கள். ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்தபிறகு அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டனர்.
இருவருக்கும் செட் ஆகாததால் பிரிந்துவிட்டதாக லாஸ்லியாவே பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கவின்-மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாஸ்லியா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
“Can’t help but wonder” என அந்த பதிவில் லாஸ்லியா கூறி இருக்கிறார். கவின் பற்றி தான் மறைமுகமாக இப்படி ஒரு பதிவை லாஸ்லியா போட்டிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *