Cinema

சட்னி சாம்பாரு’க்காக இட்லி கடை வைக்கும் யோகிபாபு!

 

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியுள்ளது. இதில் இட்லி கடை நடத்துபவராக யோகிபாபு நடித்துவருகிறார். வாணி போஜன், படித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்ணாக நடிக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading