ஓடும் விமானத்தில் ஆபாசபடம் – பணிப்பெண்ணை குறிவைத்த பயணி!

டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட்டபோது பயணி ஒருவர் தனது அருகே இருந்த பெண் பணியாளரை செல்போனில் ரகசியமாக ஆபாச போட்டோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்தபோது மன்னிப்பு கோரிய தப்பிய பயணி தற்போது ஏற்பட்டுள்ள திடீர் ட்விஸ்ட்டால் வசமாக சிக்கி உள்ளார்.
விமான பயணிகளின்போது சில பயணிகள் விமான பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகளிடம் பிரச்சனையில் ஈடுபடும் செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது டெல்லி-மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு கடந்த 2ம் திகதி ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் விமான பணிப்பெண்கள், பயணிகள் பயணித்தனர்.
இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டபோது முதல் வரிசையில் இருந்த ஆண் பயணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது அவர் தனது செல்போனில் அருகே இருந்த விமான பெண் பயணி ஒருவரை ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். அதேபோல் அவர் தனது அருகே இருந்த பெண் பயணிக்கும் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தன்னை செல்போனில் பயணி போட்டோ எடுப்பதை விமான பணிப்பெண் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சம்பவம் குறித்து பிற ஊழியர்களிடம் கூறினார். இதையடுத்து விமானத்தில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து அந்த பயணியின் செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் விமான பணிப்பெண்ணின் போட்டோக்கள் இருந்தன. அந்த போட்டோக்கள் உடனடியாக டெலிட் செய்யப்பட்டன.
மேலும் நடந்த சம்பவத்துக்கு அந்த பயணி மன்னிப்பு கோரினார். அதோடு தான் தவறை உணர்ந்துவிட்டேன் எனக்கூறி அவர் எழுத்துப்பூர்வமாகவும் கடிதம் எழுதி மன்னிப்பு கோரினார். இதையடுத்து பயணி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது அந்த சம்பவத்தில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதாவது விமானத்தில் சம்பவம் தொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீஸ் மற்றும் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.
இதுபற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், ‛‛விமானங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் விமான போக்கவரத்து டைரக்டர் ஜெனரல் சகிப்புத்தன்மை காட்டக்காது” என தெரிவித்துள்ளார். இதனால் விமானத்தில் பெண் விமான பணிப்பெண்ணை செல்போனில் படம்பிடித்த பயணி சிக்கலில் சிக்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *