இன்று முதல் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
லங்கா சதொசவில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விலை குறைக்கப்படும் பொருட்கள்…
கோதுமை மா (ஒரு கிலோகிராம்) 210 ரூபாவில் இருந்து 15 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் (1KG) 115 ரூபாவில் இருந்து 14 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு (1KG) 314 ரூபாவில் இருந்து 11 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி (1KG) 229 ரூபாவில் இருந்து 10 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
கடலை (1KG) 545 ரூபாவில் இருந்து 5 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) (1KG) 175 ரூபாவில் இருந்து 4 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.