வாடகை காதலியாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

ஜப்பானைச் சேர்ந்த கிர்மி என்ற பெண் ஒருவரின் காதலியாக இருந்து தினமும் நல்ல பணம் சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

வாடகைத் தோழியாக இருப்பதுதான் அவரது முழு நேர வேலை. அவரை சமூக வலைதளங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்

இப்போது அவர் மெக்ஸிகோவில் வசிக்கிறார். அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் திரைப்படங்களைப் பார்க்கவும், சாப்பிடவும், ஷாப்பிங் செல்லவும் பணம் வாங்குகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கிர்மி வசூலிக்கும் தொகை குறையவில்லை. கிர்மி ஒருவருடன் தங்குவதற்கு குறைந்தபட்சம் 44 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.

இதன் மூலம் 9,858 பவுண்டுகள் வரை சம்பாதிக்கிறார், அதாவது ஒரு மாதத்தில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய். ஒரு ஆண்டிற்கு கணக்கிட்டால், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.

கிர்மி வழக்கமாக தனியாக இருக்கும் ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செய்கிறாள். அவர்களில் பலர் இந்த சந்திப்பை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *