தமிழக யாசகர் இலங்கைக்கு வழங்கிய கடைசி நன்கொடை!

கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தனது கடைசி நன்கொடையை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 75 வயதான பூல்பாண்டியன் என்ற யாசகரே இவ்வாறு தனது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 10 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது என்ற நடைமுறையை 75 வயதான பூல்பாண்டியன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் பூல்பாணடியன் 50 இலட்சம் ரூபாவை தமிழக அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தமக்கு வயதாகிவிட்டதால் யாசகம் செய்வதை விடுத்து, கோவில்களுக்குச் செல்வதன் மூலம், வாழ்க்கையைச் செலவிடத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பூல்பாண்டியன்,  தனது கடைசி நன்கொடையை நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரை ஆட்சியர், பூல்பாண்டியனுக்கு சுதந்திர தினத்தின் போது ‘சமூக சேவகர் விருது’ வழங்கிக் கௌரவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *