ரஷ்ய இளம் பெண்ணுடன் நெருக்கமான Bill Gates மிரட்டி பணம் வாங்கிய பிரபலம்!

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே பில் கேட்ஸ் (Bill Gates) அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், 20 வயது ரஷ்ய பெண்ணுடன் பில் கேட்ஸ் தொடர்பில் இருந்ததாக கூறி ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் அவரை பிளாக்மெயில் செய்துள்ளார்.

பில் கேட்ஸ் உடன் நெருக்கமாக இருந்த அந்த பெண் யார்? ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) பிளாக்மெயில் செய்ய காரணம் என்ன? இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 2021ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் (Microsoft) இணை நிறுவனர் பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையை காரணம் சொல்லாமல் இருவரும் முடித்துக்கொண்டனர்.

இந்த முடிவுக்கு பில் கேட்ஸின் சில தவறான நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்த சம்பவம் முடிந்த 2 ஆண்டுகள் கடந்த நிலையில், பவுலா ஹர்த் (Paula Hart) என்னும் விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக பில் கேட்ஸ், பவுலா ஹர்த் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் காண சென்றிருந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது. இந்த பவுலா ஹர்த், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த மார்க் ஹர்த் என்பவரின் மனைவியாவார். இவர் 2019ஆம் ஆண்டில் மரணமடைந்ததை தொடர்ந்து, பவுலா ஹர்த்துக்கு பில் கேட்ஸ் உடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவே பில் கேட்ஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்திய வேளையில், ராஷ்யாவை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் ஒருவருடன் பில் கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவின் பிரபல பைனான்சியரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2017ஆம் ஆண்டு பில் கேட்ஸூக்கு இமெயில் ஒன்றை அனுப்பினார்.அதில், ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் மிலா அன்டோனோவா என்பவருக்கும் உங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து எனக்கு தெரியும். இதை வெளிப்படுத்தக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும். இந்த பணம் மிலா அன்டோனோவால் திறக்கப்பட்ட கோடிங் ஸ்கூலுக்காக நான் செலவு செய்த பணமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பில் கேட்ஸ் பணம் கொடுக்காமல், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

முதல்கட்ட விசாரணையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும், மிலா அன்டோனோவாக்கும் நட்பு இருப்பது தெரியவந்துள்ளது. 2010ஆம் ஆண்டு வாக்கில் மிலா அன்டோனோவா கோடிங் ஸ்கூல் திறக்க நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இவரும், பில் கேட்ஸூம் நெருக்கம் என்பதால், ஜெஃப்ரி எப்ஸ்டீன், மிலாவுக்கு தனது பணத்தை கொடுத்து கோடிங் ஸ்கூல் திறக்க உதவினார். இந்த பணத்தை மீண்டும் மிலாவிடம் கேட்கும்போது, அவர் கொடுக்க தாமதப்படுத்தியாதாக கூறப்படுகிறது.

இதனால், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பணத்தை பெற பில் கேட்ஸூக்கு மெயில் அனுப்பி பிளாக்மெயில் செய்துள்ளார். ஆனால், மிலா அன்டோனோவாவுக்கும் பில் கேட்ஸூக்கும் இடையே என்ன தொடர்பு இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. இதன் காரணமாக மிலா அன்டோனோவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு பைனான்சியர் மட்டுமல்ல மிகப்பெரும் பணக்காரர். அதானலேயே எனக்கு கோடிங் ஸ்கூல் திறக்க உதவினார்.

நானாக பணம் கேட்கவில்லை, அவராகவே உதவினார். அதன்பின் எதற்காக பில் கேட்ஸூக்கு இமெயில் அனுப்பி பிளாக்மெயில் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். இப்போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு எதிராக வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் அண்மையில் ஆஜரானார். அப்போதே இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிலா அன்டோனோவா மற்றும் பில் கேட்ஸ் 2010ஆம் ஆண்டில் பல முறை சந்தித்துள்ளனர். அப்போது மிலா அன்டோனோவாவுக்கு 20 வயதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *