இலங்கையை அச்சுறுத்தும் ஆபத்து 400 பேர் பாதிப்பு!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 முதல் 400 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் நளின் ஆரியரத்ன எச்சரித்துள்ளார்.

டெங்கு நோயின் அபாயகரமான அதிகரிப்பு குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் டெங்குவைத் தடுக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளிகளின் வீதமும் அதிகரித்து வருவதாகவும், தற்போது 43 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக குழந்தைகள் நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்தியர் இந்திக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *