“Best Baguette in Paris” விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!

பகெட் என்னும் பாண் அல்லது ரொட்டி வகை பிரான்சில் மிகவும் பிரபலம்.

பாரிசில் சிறந்த பகெட்டை யார் விற்கிறார் என்று அங்கு கடந்த 30 ஆண்டுகளாகப் போட்டி நடத்தி சிறப்பாக அதை செய்பவருக்கு பரிசு கொடுத்து கெளரவப்படுத்தப்பட்டு வரப்படுகிறது

இந்த வருடம் நடத்தப்பட்ட பாரிசின் சிறந்த ‘பகெட்’க்கான (Best Baguette in Paris) விருதை இலங்கையை பூர்விகமாக கொண்ட 37 வயது தர்‌ஷன் செல்வராஜா தட்டிச் சென்றுள்ளார்.

இந்த போட்டியில் வென்றதின் மூலம் அவருக்கு 4000 யூரோ கிடைத்தாலும் அவர் தயாரித்த ரொட்டியை பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகைக்கு விற்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் புதிதாக கடை திறந்தவருக்கு மறுநாளே நேர்ந்த கதி
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பாரிசுக்கு வந்த தமக்கு இவ்விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக தர்‌ஷன் கூறினார்.

வெளிநாட்டவராக இங்கு வந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன், தமது பெயர் வெற்றியாளர் பட்டியலில் இருந்ததைக் கண்டவுடன் தாம் அழத் தொடங்கியதாகவும் தர்‌ஷன் குறிப்பிட்டார்.

175 மிகச் சிறந்த பாண் தயாரிக்கும் போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு இருந்தார்கள். 15 பேர் நடுவராக கலந்துகொண்டு பகெட்டை சுவைத்து வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.

30 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. யுனஸ்கோவின் தொட்டுணரப்படாத மரபுடமை பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *