500 மில்லியன் டொலர் செலவில் கன்னாடி நகரம் அசத்தப்போகும் சவுதி!

இங்கு அப்படியென்ன இருக்கிறது? கற்பனைக் கதைகளில் வருவதுபோன்ற, மாசு இல்லாத மாய நகரம் ஒன்றை 500 பில்லியன் டாலர் செலவில் கட்ட திட்டமிட்டுள்ளது சவுதி அரேபியா. NEOM நகரம் எனக் குறிப்பிடப்படும் இது 170-கிமீ நீளத்தில் பூஜ்ஜிய கார்பன் நகரமாக இருக்கும். இதன் கட்டுமானத்தை 2030க்குள் முடிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

திரைப்படங்களில் நாம் பல அதிசய நகரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். இவையெல்லாம் வெறும் கற்பனைதான், நிஜத்தில் இப்படி ஒன்றை உருவாக்குவது சாத்தியமேயில்லை என அவற்றைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும். ஆனால், நாள்தோறும் வளர்ந்து புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சியால், கற்பனைக்கு எட்டாதவைகளைக்கூட சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையை அறிவியல் கொடுத்து வருகிறது. இந்த நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டுதான், மிகப் பெரிய பொறியியல் அதிசய நகரத்தை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளது

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா. The Line திட்டம் எண்ணெய் வளம் மிக்க இந்நாடு, சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கு The Line என்ற திட்டத்தின் பெயரில் கார்பன் இல்லாத, நீண்ட கோடு போன்ற பிரமாண்ட நகரம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. இந்த நகரத்தின் கட்டுமானத்தை 2030க்குள் முடிக்க அந்நாட்டின் பட்டத்து இளவரசரும், ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார்.

வரலாற்றில் தனது பெயர் இடம்பெறும் வகையில் இப்படி ஒரு அதிசய நகரத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று. அவ்வப்போது தனது கனவு நகரம் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் முகமது பின் சல்மான்.

அந்தவகையில், வேலை, வாழ்க்கை, விவசாயம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும் இந்த அற்புத நகரம் பற்றிய ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை The wall street journal வெளியிட்டுள்ளது.

பிரமாண்ட நகரம் வடமேற்கு சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டொலர் செலவில் இந்த நகரம் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்தாண்டு தொடக்கத்தில் முகமது பின் சல்மான் அறிவித்தார். தற்போது இந்நகரத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நகரமானது மனிதகுலத்தின் அடுத்த அத்தியாயமாகவும், பட்டத்து இளவரசரின் பாரம்பரியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் எதிர்கால பொருளாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு, கார்பன் இல்லாத நகரமாக உருவாக்கப்படும் இந்த நகரத்திற்கு ‘NEOM’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபுறமும் வெளிப்பக்கத்தில் கண்ணாடியில் மூடப்பட்ட மாதிரியான தோற்றத்தில், நீண்டதொரு ’கண்ணாடி மாளிகை’யாக இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. 200 மீட்டர் அகலமும், 170 கிலோமீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமும் இருக்கும் இந்த நகரத்தில், 9 மில்லியன் பேர் வசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நீண்ட கோடு போன்ற அமைப்பில் இந்த நகரமானது உருவாக்கப்படுகிறது. அதாவது, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, ஒரு நீண்ட கோடாக இது தெரியும். அதனாலேயே, இதற்கு The lines எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க கட்டுமான நிறுவனமான Morphosis Architects இந்த கனவு நகரத்தை டிசைன் செய்துள்ளது. 170 கிமீ நீளம் கொண்ட இந்த நகரை, இந்த மூலையில் இருந்து, அந்த மூலையை 20 நிமிடங்களுக்கு அடைந்துவிடும் வகையில் அதிவேக இரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, ஐந்து நிமிட நடைப்பயணத்தில் LINE-ல் உள்ள அனைத்து வசதிகளையும் அடையும் வகையில் சிறப்பாக இந்நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. செங்குத்து கட்டுமானம் வழக்கமான கட்டுமானங்களில் இருந்து வேறுபட்டது இந்நகரின் கட்டுமானம். அதாவது, கிடைமட்டமாகக் கட்டப்படும் கட்டுமானமாக இல்லாமல் செங்குத்தான அடுக்குகள் கொண்ட கட்டுமானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, மேல் அடுக்கில் மக்கள் நடந்து செல்வதற்கான சாலைகள், பூங்காக்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அதன் கீழ் அடுக்கில் பள்ளிகள், காலேஜ் மற்றும் ஐடி போன்ற வணிக வளாகங்கள் இருக்குமாம். மேலும் இந்த நகரத்திற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் (artificial intelligence) எனப்படும் செயற்கை அறிவுத்திறனைப் பயன்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.

கார்பன் இல்லாத நகரமாக கட்டமைக்கப்படுவதால், ‘NEOM’ நகரில் மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்கள் ஏதும் இருக்காது. முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மட்டுமே இந்நகரம் இயங்க உள்ளது. NEOM-இன் பிராந்தியப் பகுதியான TROJENA கேட்வே, டிஸ்கவர், வேலி, எக்ஸ்ப்ளோர், ரிலாக்ஸ் மற்றும் ஃபன் என ஆறு மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

இது அகபா வளைகுடா கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் நமது இயற்கைப் பகுதியின் மையப்பகுதியில் 1,500 மீட்டர் முதல் 2,600 மீட்டர் வரை உயரம் மற்றும் கிட்டத்தட்ட 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயம் எதிர்காலத்தில் இந்த நகரத்தில் வசிக்க இருப்பவர்கள், நாளொன்றுக்கு மூன்று வேளை உணவுக்கும் பணம் செலுத்த வேண்டுமாம். கட்டிடங்கள் செங்குத்தாக இருப்பதால், பளபளப்பான, கண்ணாடியால் மூடப்பட்ட கட்டிடங்களில் செங்குத்து அமைப்பில் விவசாயம் நடைபெறும் என இந்த நகரம் தொடர்பான அறிக்கைகள் கூறுகின்றன.

‘மிரர் லைன்’ சவூதி அரேபியாவின் கடலோர பாலைவனம், மலை மற்றும் மேல் பள்ளத்தாக்கு நிலப்பகுதி வழியாக செல்லும். வெளிப்புற கண்ணாடி முகப்பானது, கட்டமைப்பை நிலப்பரப்பின் ஒரு தனித்துவமான பகுதியாக மாற்றும் என்று கூறப்படுகிறது.

குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் வாழும் வகையில் இந்நகரம் கட்டுமானம் செய்யப்பட உள்ளது. இந்த ‘NEOM’ நகரம் மாசு இல்லாத உலகை உருவாக்க விரும்பும் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியான நகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த நகரம் எதிர்பார்த்தபடி கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் கட்டுமானத் துறையில் அது மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். சர்ச்சை பிரம்மிக்க வைக்கும்படியான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள போதும், இந்தத் திட்டமும் சர்ச்சைகளில் சிக்கத் தவறவில்லை. இந்த நகரத்தை கட்டமைப்பதற்காக, அங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த பழங்குடிமக்கள் கட்டாயமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, ‘ஏற்கனவே இப்படியான பல முயற்சிகள் கடலில் மூழ்கத் தொடங்கி விட்டன. இதுவும் அதுபோல் நடக்க வாய்ப்புகள் அதிகம்’ என்பதும் நெட்டிசன்களின் வாதமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *