கொழும்பு கலைஞருக்கு டவர் மண்டபத்தில் பொன் விழா!

 

கொழும்பில்
50 வருட காலமாக தமிழ் நாடக வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த *கலாபூஷணம்* *கே. செல்வராஜன் அவர்களுக்கு* தலைநகரில் பொன்விழா

முத்தமிழன் மூன்றாம் தமிழான நாடக கலை மீது ஆர்வம் கொண்ட இவர் 1973 ஆம் ஆண்டு *கேளுங்க ள் தரப்படும்* என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றித் தனது முதற்படியை ஏனிப்படியாக்கிய 1973 ஆம் ஆண்டு சிலோன் யுனைடெட் ஸ்டேஜ் என்ற கலை நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 50 ஆண்டுகளாக அந்த அமைப்பின் தலைவராகவும் மன்றத்தின் மூலம் 45 நாடகங்களை பல தடவை மேடை யேற்றியதோடு பல இளம் தலைமுறை கலைஞ‌ர்களை உருவாக்கி நாடக உலகிற்க்கு அறிமுக படித்தியுள்ளார் இவர் மேடையேற்றிய பல நாடகங்கள் இவருக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளது நாடகத் துறை மட்டுமல்லாது கவிதை, பாடல் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர் இவரது மெல்லிசை பாடல்கள் வானொலியில் அரங்கேற்றம் சங்கமம் ரூபவாஹினியில் உதயகீதம் போன்ற நிகழ்ச்சிகளில் ஓலி, ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது பக்தி பாடல்கள் இசை தட்டுகளாகவும் வெளிவந்துள்ளது

*என் நினைவுகளும் நிஜங்களும்*,*

*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்*

*கொழும்பு கொட்டாஞ்சேனை நாடகப் பாரம்பரியம்* போன்ற மூன்று நூல்களை எழுதி வெளியிட்ட இவரது கலை, இலக்கிய திறமைகளைப் பாராட்டி அரசு 2019 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கியுள்ளது சமாதான நீதவான் பட்டமும் இவரை அலங்கரித்துள்ளது 1973 முதல் இன்று வரை கலை சேவையாற்றி வரும் இவரது பொன்விழா ஆண்டில் இவருக்கு சிறப்பு விருது வழங்குவதில் பெறுமையடைவதாக கலைமாமணி பொன். பத்மநாதன் தெரிவித்துக்கொள்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *