நடிகையின் அக்காவிற்கு ரூட் போட்டு கமலின் பெயரை சொன்னதும் தப்பி ஓடிய ரஜினி!

அடிப்படையிலேயே முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவராக ரஜினி இருந்திருக்கிறார். அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது அவருடைய பள்ளி பருவம் தான். முதலில் கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, அதன் பிறகு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியில் சேர்ந்தார். இவருக்குள் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என்பதை அறிந்து முதலில் அதை வெளிக்கொணர்ந்தவர் அவருடைய நண்பர்.

அவருடைய உதவியால் தான் தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு ரஜினி விண்ணப்பிக்க முடிந்தது. வசன உச்சரிப்பு மேக்கப் டெஸ்ட் மற்றும் நடிப்பு என அனைத்து நேர்காணலிலும் வெற்றி பெற்று அங்கே நடிப்பை கற்க தொடங்கினார் ரஜினி. அங்கே தேர்வு அதிகாரிகளாக பிரபல இயக்குனர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் வந்தவர் தான் கே. பாலச்சந்தர். அங்குதான் ரஜினியின் அறிமுகம் கிடைத்தது. அதிலிருந்து தான் ரஜினிக்கு அபூர்வராகங்கள் என்ற படத்தில் முதன் முதலில் வாய்ப்பை கொடுத்தார் கே பாலச்சந்தர்.

இந்த படத்திற்குப் பிறகுதான் ரஜினிக்கு இருந்த பெயரான சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜினி என கே பாலச்சந்தர் மாற்றினார். அந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடித்திருப்பார் ரஜினி. முதல் காட்சியிலேயே தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசி நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மூன்று முடிச்சு அவர்கள் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று மிகவும் பிரபலமானார் ரஜினி.

துணை நடிகர், வில்லன் கதாபாத்திரம் இரண்டாம் நாயகன், கதாநாயகன் ,சூப்பர் ஸ்டார் ,உச்ச நடிகர் என அடுத்தடுத்த தன் வளர்ச்சியால் இன்று தமிழ்நாடே அவரை தலைவர் என்று அழைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினியை பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

சுகாசினி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரும் அவருடைய அக்காவும் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிற்கு நடைப்பயிற்சி போவார்களாம். சுகாசினியின் அக்கா மிகவும் அழகாக இருப்பாராம். நடை பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு கார் வந்து நின்றதாம். அந்தக் கார் கண்ணாடியை இறக்கி ஒரு ஆள் லிப்ட் எதுவும் வேணுமா என்று கேட்டாராம்.

அது வேறு யாரும் இல்லை நடிகர் ரஜினி தான். உடனே சுகாசினி நான் கமலஹாசனின் அண்ணன் பொண்ணு என்று கூறினாராம். அதைக் கேட்டதும் உடனே காரை எடுத்து கிளம்பி விட்டாராம் ரஜினிகாந்த். இந்த சம்பவத்தை கூறிய சுகாசினி ,இது ரஜினிக்கு கூட ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அது அப்பொழுது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *