வரலாற்றில் முதல் முறையாக உலக வங்கி தலைவராக இந்தியர் தெரிவு!
உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதன் சிறப்பு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்திருப்பது சிறப்பு.
அவர் ஜூன் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு புதிய பதவியில் பணியாற்றுவார்.