ஜுன் மாதத்தில் அமெரிக்காவில் பணம் தீர்ந்துவிடும் என எச்சரிக்கை!

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன், கடன் உச்சவரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தவோ தவறினால், ஜூன் 1 ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் பணம் தீர்ந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

கடன் வரம்பை எட்டினால் அமெரிக்க அரசாங்கம் இனி கடன் வாங்க முடியாது என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை அடுத்தடுத்து மூடப்பட்டதால், அமெரிக்க சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

நெருக்கடி மேலும் பரவுவதைத் தடுத்து, சேமித்தவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதம், கண்காணிப்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்விரு வங்கிகளுக்கு அவசர உதவிகள் வழங்கும் என்று ஜேனட் யெலன் கூறினார்.

மேலும், இத்தகைய அவசர உதவிகள் நிரந்தர நடவடிக்கையல்ல எனக் குறிப்பிட்ட அவர், வங்கிகளிலுள்ள அனைத்து சேமிப்புத் தொகைகளுக்கும் அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிவித்தார்.

நெருக்கடி மேலும் பரவினால், வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் முழு தொகையையும் சேமித்தவர்கள் ஒரே சமயத்தில் திரும்பக் கேட்கும் அபாயம் உருவாகும் என்றும யெலன் முன்னர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *