கோலி – கம்பீர் இடையே மைதானத்தில் வெடித்த மோதலால் பரபரப்பு!

விராட் கோலி-கவுதம் கம்பீர் இடையே வெடித்த வாக்குவாதம்..!மைதானத்தில் ஏற்பட்ட உச்சக்கட்ட பரபரப்பு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீன் உல்-ஹக்- விராட் கோலி வாக்குவாதம்
ஐபிஎல்-லின் 43வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின, இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 126 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

ஆனால் இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் விக்கெட்டுகளும் ஒருபுறம் மலமலவென சரிந்தது, இதனை விராட் கோலி உற்சாகத்துடன் கொண்டாடவே, இதனால் கோபமடைந்த எதிரணி வீரர் நவீன் உல்-ஹக்கிற்கும் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் மிகப்பெரிய சலசலப்பை மைதானத்தில் ஏற்படுத்திய நிலையில், மறுமுனை வீரர் அமித் மிஸ்ரா மற்றும் நடுவர்கள் தலையிட்டு வாக்குவாதத்தை நிறுத்தினர்.

இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்கள் மட்டுமே குவித்து RCB அணியிடம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

விராட் கோலி-கவுதம் கம்பீர் மோதல்
இதையடுத்து போட்டியின் நிறைவுக்கு பிறகு, இரு அணி வீரர்களும் கை குழுக்கி கொண்ட நிலையில் அப்போதும் விராட் கோலி மற்றும் நவீன் உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து விராட் கோலி வெற்றி உற்சாகத்துடன் சைகைகளை செய்து கொண்டு நடந்து வந்த போது, லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது கைல் மேயர்ஸின் கையை பிடித்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்.

இதனால் மீண்டும் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் விராட் கோலியும் கவுதம் கம்பீரும் மோதிக் கொள்ளும் அளவிற்கு தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோர் தலையீட்டு விராட் கோலியையும், கவுதம் கம்பீரையும் தனித்தனியாக பிரித்து சென்றனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பலி வாங்கிய கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமாக அந்த வெற்றியை கொண்டாடி இருந்தார்.

அத்துடன் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த RCB ரசிகர்களை பார்த்து, உதடுகளில் விரலை வைத்து அவர்களை அமைதிப்படுத்தும் சைகை செய்து இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை RCB வென்ற நிலையில், விராட் கோலி அதே சைகையை மைதானத்தில் திருப்பி செய்து காட்டி, அவ்வாறு செய்ய கூடாது, அன்பு மட்டுமே செலுத்த வேண்டும் சென்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *