விஜய் செய்ய தவறியதை தனி மனிதனாக சாதித்து காட்டிய அஜித்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித். இருவரும் சம காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். சமமான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்கள்.

ஒரு நடிகராக இருந்து இன்று ஒரு பெரிய ஸ்டார் ஆக வளர்ந்து நிற்கிறார்கள் என்றால் அவர்களின் தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே காரணமாகும். அதிலும் குறிப்பாக அஜித் முற்றிலும் வித்தியாசமானவர். நடிகரிலிருந்து ஸ்டாராக அந்தஸ்து பெற்றவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதற்கு ஏற்ப சினிமாவில் வலம் வருவார்கள.

உதாரணமாக விஜய் படங்கள் என்றாலே கண்டிப்பாக ஒரு ஆக்சன் காட்சி , ஒரு ஓப்பனிங் சாங் ஹீரோயின் டூயட் என ஒரு டெம்ப்ளேட்டை வரையறுத்திருப்பார்கள். ஆனால் அதில் அஜித் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறார்.

குறிப்பாக அவரின் படங்களை எடுத்துக் கொண்டால் அதாவது வாலி படத்தில் எந்த ஒரு நடிகரும் செய்ய தயங்கிய ஒரு கதாபாத்திரம் தனது தம்பி மனைவியின் மேல் ஆசைப்படும் வில்லத்தனமாக கதாபாத்திரம். அதை மிகவும் துணிந்து எடுத்து நடித்து அதிலும் வெற்றி கண்டவர் அஜித்.

அதேபோல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மல்டி ஸ்டாராக அமைந்திருந்த அந்தப் படம். அந்தப் படத்தில் நடிக்கும் போதே அஜித் ஒரு வளர்ந்த நடிகராக இருந்தார் ஆனாலும் அந்தப் படத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதேபோல மங்காத்தா படத்தில் வில்லன் கதா பாத்திரத்தை ஏற்று மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றவர் . பொதுவாக கமல், ரஜினி ஆகியோர் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்கள். ஆனால் ஏன் வில்லன் ஆனார்கள் என்பதற்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கும். ஆனால் இந்த மங்காத்தா படத்தில் ஆரம்பத்திலிருந்து தான் ஒரு வில்லன் என்பதை எல்லா காட்சிகளிலும் நிரூபித்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தவர்.

சமீப கால படங்களான விவேகம், வலிமை துணிவு ஆகிய படங்களை எடுத்துக் கொண்டால் நடிகையுடன் எந்த ஒரு டூயட் காட்சியும் இல்லாமல் நடித்தவர் . அதேபோல நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபிளாஷ்பேக் தவிர்த்து மற்ற காட்சிகள் முழுவதும் வயதான தோற்றத்திலேயே நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர்.

இப்படி நடித்த எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்க்ஷனை அள்ளிய படங்களாகும். ஹீரோ என்றாலே அவர்களுக்கு என்ற ஒரு தனி டெம்ப்ளேட் சினிமாவில் வரையறுத்து வைத்திருப்பார்கள் ஆனால் அதை எல்லாம் தவிர்த்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இன்றுவரை ஒரு அல்டிமேட் ஸ்டார் ஆக வளர்ந்து நிற்கிறார் அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *