மாரடைப்பால் உமிழ்ந்த நபர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்!

திடீரென மாரடைப்பால் இறந்து சுமார் 28 நிமிடங்களுக்கு பின்னர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த பின்னர் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக நமது வீடுகளில் இறந்த பின்னர் நடக்கும் என்பது தொடர்பில் கண்டிப்பாக பேசியிருப்போம். அப்படி நாம் கதைகளில், வீடியோக்களில் பார்க்கும் போது இது தான் உண்மையா?அல்லது இதையும் தாண்டி வேறு எதும் உள்ளதா? என ஆராய்ந்து பார்த்திருப்போம்.

ஆனால் இதில் என்ன நடக்கிறது என்ற உண்மை இறந்தவர்கள் உயிருடன் வந்து சொன்னால் மாத்திரமே புரிகிறது.

அந்த வகையில் இப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில் ஜிட்பெல், 28 நிமிடங்கள் மரணித்து மீண்டும் உயிர் பெற்றுள்ளார் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

மேலும் குறித்து நபர் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஒரு நாள் அவரின் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு வந்து சுருண்டு விழுந்துள்ளார்.

அப்போது பக்கத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குறித்து நபர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.

உயிர்த்தெழுந்தவரின் பிரமிக்க வைக்கும் அனுபவம்
இதனை தொடர்ந்து சுமார் 28 நிமிடங்களுக்கு பின்னர் அவர் மீண்டும் உயிருடன் வந்துள்ளார்.

அப்போது அந்த அனுபவத்தை அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது,“ எல்லாம் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என எனக்கு தெரியாது. இது போன்ற ஆராய்ச்சிகளில் சில பேசுவதை கேட்டுள்ளேன். ஆனால் எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை.

மாறாக என் உயிர் மட்டும் பறப்பது போல் இருந்தது. பின்னர் அங்கு என்ன நடந்தது என எனக்கு ஞாபகமும் இல்லை. தொடர்ந்து நான் இறக்க வேண்டும் என்றால் கவலை படும் போது இறந்திருக்கலாம்.

ஆனால் இப்போது எனக்கு நடந்தது வியப்பாக இருக்கிறது. இதிலிருந்து நான் புரிந்து கொண்ட விடயம் என்னவென்றால், வாழ்க்கையில்க கவலைப்பட ஒரு விடயமும் இல்லை” என ஓபனாக கூறியுள்ளார். இந்த செய்தி அப்பகுதி மக்களை ஒரு நிமிடம் உறைய வைத்துள்ளது.

இதனை பார்த்த இணையவாசிகள், “இந்த விடயம் கடவுளின் சித்தம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *