அந்த காலத்து திரைப்படத்தில் அட்ஜெஸ்மென்ட் பிரச்சினை இருந்ததா?

சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் மோசமான விஷயத்தால் பல நடிகைகள் பாதித்துள்ளதாக தெரிவித்து வரும் சூழலில் அந்த காலத்தில் இருந்த அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி நடிகை செளகார் ஜானகி சில ஆண்டுகளுக்கு முன்னதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

92 வயதாகும் நடிகை செளகார் ஜானகி இன்னமும் தனது குழந்தைகள், பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

15 வயதில் திருமணம் ஆன நிலையில், 16 வயதில் 3 மாத கைக்குழந்தையுடன் சினிமாவில் நடிகையாக நடிக்க வந்தவர் செளகார் ஜானகி என்பதை கேட்கும் போதே ரசிகர்களுக்கு நிச்சயம் புல்லரித்து விடும்.

70 ஆண்டுகால சினிமா: நடிகைகளுக்கு நடிப்புத் திறமையை தவிர வேறொன்றும் தேவையில்லை என்பதை நிரூபித்து 70 ஆண்டுகள் சினிமாத் துறையில் மகத்தான சாதனை படைத்தவர் செளகார் ஜானகி.

1952ம் ஆண்டு செளகார் எனும் தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் அதே ஆண்டு வெளியான வளையாபதி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று தமிழ்நாடு முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர் செளகார் ஜானகி.

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர் உடனும் இவர் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தியவர் செளகார் ஜானகி.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிரான்ஸ்பரன்ட்டா தெரியுதுன்னு சொன்ன எம்ஜிஆர்: நடிகை செளகார் ஜானகி ஒய்ஜி மகேந்திரனுக்கு அளித்த பேட்டியில் அந்த காலத்தில் நடந்த பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ள த்ரோபேக் பேட்டி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

பணம் படைத்தவன் படத்தில் “கண் போன போக்கிலே” பாடலில் காஸ்ட்யூம் டிசைனர் எனக்கு கொடுத்த ஆடை லைட் போட்டால் எல்லாம் தெரியும் படி இருந்தது. அதனை கவனித்த எம்ஜிஆர், கேமரா மேனிடம் சொல்லி ஷூட்டிங்கையே நிறுத்தினார். டிரெஸ் ரொம்ப டிரான்ஸ்பரன்ட்டா வெங்காய தோல் மாதிரி தெரியுது. உங்க இமேஜை அது கெடுத்து விடும் என சொல்லி அந்த உடையையே மாற்ற வைத்து நடிக்க வைத்தார்.

அவருக்கு நான் என்ன டிரெஸ் போட்டால் என்ன? என விட்டு இருக்கலாம். அவருடன் பல நடிகைகள் கவர்ச்சியாக நடித்துள்ளனர். ஆனால், என் இமேஜ் ஸ்பாயில் ஆகிடக் கூடாது என அவர் கவலைப்பட்டது என்னால் எப்பவும் மறக்க முடியாது என்றார். அட்ஜெஸ்ட்மென்ட் சர்ச்சை இருந்ததா?: பணிந்து போகணும் ‘with pleasure’ என்கிற கான்ட்ராக்ட்டே அப்போ கிடையாது. இண்டஸ்ட்ரியும் ரொம்பவே நல்லா இருந்தது. கான்ட்ராக்ட்னா வெறும் சினிமா கான்ட்ராக்ட் மட்டும் தான் இருந்தது என பளிச்சென கூறியுள்ளார்.

சில நடிகர்களை மட்டுமே சுற்றியபடி இப்போ சினிமா இருக்கு, அப்போ அப்படி கிடையாது. கதை தான் ஹீரோவாக இருந்தது. நடிகைகள் வெறும் காட்சி பொருளாக கிளாமர் ஹீரோயினாக மட்டும் வலம் வரவில்லை. ஒவ்வொரு நடிகைகளும் திறமையான நடிகைகளாக இருந்தனர்.

க்ளோஸ் அப் ஷாட் வைத்தால் பக்காவாக நடிக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால், இப்போ அப்படி கதை எழுதவும் ஆட்கள் குறைவு, திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பும் குறைவாக உள்ளது என வெளுத்து விட்ட பேட்டி டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *