வனிதாவின் மூன்றாவது கணவர் திடீர் மரணம்!
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. விஷுவல் எபெக்ட் பொறியாளரான பீட்டர் பால், வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்பதும் இந்த விவகாரம் குறித்து கஸ்தூரி உள்பட ஒரு சில நடிகைகள் காரசாரமாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்ததை மறுத்த வனிதா அதன் பிறகு அவரை பிரிந்து விட்டதாகவும் கூறியதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பீட்டர் பால் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் அதனால் அவரது கல்லீரல் மிகவும் பாதிப்படைந்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் அவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் காலமாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குடிப்பழக்கம் காரணமாக பீட்டர் பால் மரணம் அடைந்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்