நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்ட 40 பேரால் பரபரப்பு!

அமெரிக்கா – நியூயார்க்கில் ஆடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, சற்று வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக இருப்பதாக அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக, ஒன்றாக அமர்ந்து மூச்சு பயிற்சி செய்துள்ளனர். அதன் பின் படுத்துக் கொண்டு பலவித யோகாசன முறைகள் போன்ற சில பயிற்சிகள் செய்துள்ளார்கள்.

நுழைவு கட்டணம் $44 டொலர் முதல் $88 டொலர் வரை 

அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து, இயற்கையான முறையில் மண்ணில் விளைந்த காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டுள்ளார்கள்.

இந்தநிலையில் நிகழ்வை நடத்தி வரும் சார்லி அன் மேக்ஸ் கூறுகையில்,

‘நாங்கள் நிர்வாணமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மிக தூய்மையான மற்றும் இயற்கையாக சுயத்தை வெளிப்படுத்துகிறோம். பாகுபாடு இல்லாமல் ஆரோக்கியமான உணவினை உண்டு புன்னகையுடன் இரவை கழிக்கிறோம் என கூறியுள்ளாராம்.

அதேசமயம் நகரங்களில் செல்லும் போது பெண்கள் அணியும் ஆடையினால் எத்தனை மனஅழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.’ ஆனால் இங்கு அனைவரும் சுதந்திரமாக உணர்கிறோம்.

இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஒரு பயிற்சியாக தான் நான் பார்க்கிறேன்’ அதில் கலந்து கொண்ட பெண் ஒருவர் பத்திரிக்கையாளருக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஒரு இரவு இந்த உணவு விருந்தில் கலந்து கொள்ள $44 டொலர் முதல் $88 டொலர் வரை, நுழைவு கட்டணம் செலுத்த வேண்டுமென நிறுவனர் சார்லி அன் மேக்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *