IMF தீர்மானத்திற்கு ஆதரவாக 120 எதிராக 25 வாக்குகள்!
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் நடைபெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தினால், 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட, 2.9 பில்லியன் டொலர் நிதி வசதி வழங்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை, கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.