முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தது தவறு அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

கொவிட் தொற்றுக் காலங்களில் முஸ்லிம் மரணங்களை கட்டாயமாக எரித்தமையானது இலக்கணப்படி தவறு என தான் ஏற்றுக் கொள்வதாக இந்நாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் கேள்வி எழுப்புகையில்;

“.. அன்று கொவிட் மரணங்கள் குறித்து கவனம் செலுத்த கொவிட் மரணங்களை எரிக்க, புதைக்க விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று நிறுவப்பட்டது.

அவர்களது அன்றைய விவாதமாக இருந்தது, கொவிட் வைரஸ் ஆனது நிலக்கடி நீரினால் பரவும் என்பதாகும். அது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத ஏனைய சகோதரர்களையும் பெரிதும் பாதித்த ஒன்றாகும். அதுவும் ஒரு தொலை தூரத்திற்கு ஓட்டமாவடிக்கு கொண்டு சென்று, அதுவும் அடிப்படையே இல்லாத வெறும் இனவாத அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை நாம் அறிவோம்.

அதனை தாங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..” என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்றைய தினம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய;

“உண்மையில் நான் அப்போது சுகாதார அமைச்சராக இருக்கவில்லை மாறாக அன்றைய காலம் நான் ஊடக அமைச்சராகவே இருந்தேன். உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். அது இலக்கணப்படி தவறானது..” எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *