துபாய் சிறையில் பிரபல நடிகை கழிவறை நீரில் கோப்பி குடித்ததாக பகீர் தகவல்!

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கிறிஸான் தனது சிறை வாழ்க்கைப் பற்றி கவலையுடன் பதிவிட்டிருக்கிறார்.

பிரபல பொலிவூட் நடிகையான கிறிசான் பெரெய்ரா அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து அவரின் கோப்பையில் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் கைது செய்து அவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 1ஆம் திகதி நடிகை கிறிசான் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 26ஆம் திகதி தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

சிறைவாழ்க்கையை பகிர்ந்துக் கொண்ட பிரபல நடிகை

அதற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் தான் கிறிசானின் தாய் மீது இருந்த பகையை மனதில் வைத்துக் கொண்டு அண்டனி பால் என்பவரும் அவரின் கூட்டாளியுமான ரவி என்பவருடன் சேர்ந்து கிறிசானின் கோப்பையில் போதைப் பொருளை கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியேறியப்பின் தனது ரசிகர்களுக்கு தனது சிறை வாழ்க்கை குறித்து பல தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் 3 வாரம் 5 நாட்கள் சிறையில் இருந்தேன். இந்த நாட்களில் நான் தலைகுளிக்கும் போது துணி துவைக்கும் சலவைப் பவுடரில் தான் தலையை கழுவினேன்.

கழிவறையில் வரும் தண்ணீரில் தான் காபி போட்டுக்கு குடித்தேன். இருந்து இருந்து சிறையில் பொலிவூட் படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

எனது வாழ்க்கையில் எத்தனையோ இலட்சியங்கள் இருந்தது ஆனால் என்னை சிறை வரைக்கும் கொண்டு சென்று விட்டதே என படம் பார்க்கும் போதெல்லாம் வெறும் அழுகை மட்டும் தான் வரும்.

நான் சில கொடூரர்களின் விளையாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.நான் என் வீட்டிற்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன். மேலும், என்னைப் போல குற்றமற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றிகள். நீதியே வெல்லும் என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *