காதலித்தவரின் தந்தையுடன் வீட்டை விட்டு ஓடி குடித்தனம் நடத்திய காதலி!

செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கான்பூர் உத்தரபிரதேசத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகியுள்ளது.கான்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீடு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கம்லேஷ்குமார் தனது 20 வயது மகன் அமித் உடன் கான்பூரின் சக்கேரி பகுதிக்கு கட்டிட தொழிலுக்கு வந்து உள்ளார். அமித் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்து உள்ளார்.

அந்த இலம் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். அப்போது அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மார்ச் 2022 இளம் பெண்ணும் , கமலேஷையும் காணவில்லை. இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் சக்கேரி காவல் நிலையத்தில் இளம்பெண் கடத்த்ப்ப்ட்டதாக புகார் அளித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஓராண்டு விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் டெல்லியில் கண்டுபிடித்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கமலேஷ் மற்றும் இளம்பெண் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கமலேஷ் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில், புதன்கிழமை அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கமலேஷுடன் வாழ விரும்புவதாக இளம்பெண் போலீசாரிடம் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *