கடையில் வாங்கிய கோழி முட்டையில் அல்லாஹ்வின் திருநாமம்!

 

கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர்.

ஐஸ்லாந்து நாட்டில் வசிக்கும் அனிசா என்பவர், தனது கணவர் பரித் ஜுசாப் என்பவருக்கு மிகவும் பிடித்தமான கேக் தயாரிப்பதற்காக கடையில் இருந்து கோழி முட்டைகளை வாங்கி வந்தார். அவற்றை உடைத்து கேக் செய்ய முற்பட்டபோது, ஒரு முட்டையின் ஓட்டில் மட்டும் தடிமனான சில ரேகைகள் காணப்படுவதை அனிஸ் கவனித்தார்.

அந்த முட்டையை நெருக்கமாக வைத்து, உற்றுப்பார்த்தபோது ‘லாஇலாஹா’ (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன், வேறு யாருமில்லை) என்ற அராபிய மொழி எழுத்துக்கள் அதில் காணப்பட்டன.

இதையடுத்து, புல்லரித்துப்போன அவர் அந்த முட்டையை உள்ளூரில் இருக்கும் மசூதியில் இமாமாக உள்ள ஒருவரிடம் காட்டி, வியந்தார்.
இது உங்களுக்கு இறைவனிடம் இருந்துவந்த நற்செய்தியாகும். அந்த முட்டையின் ஓட்டினை சின்னதாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் முட்டையின் கருவை நீயும், உன் கணவரும் சமைத்து சாப்பிடுங்கள். ஓட்டை மட்டும் ஒரு கண்ணாடி குவளைக்குள் போட்டுவைத்து, பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என அந்த இமாம் கூறினார்.

இதையடுத்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த முட்டையின் ஓட்டை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான

இஸ்லாமியர்கள் தினந்தோறும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்வதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாங்கள் ஐவேளையும் தவறாமல் இறைவனை தொழும் பழக்கம் கொண்டவர்கள் அல்ல; எங்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இறைவன் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளதாகவே இந்த முட்டையை பார்த்ததும் கருதத் தோன்றுகிறது, என பரித் ஜுசாப்- அனிசா தம்பதியர் கூறுவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *