ஒருவர் இறந்தபின் என்ன நடக்கும் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்!

பொதுவாக மனிதர்களாக இருக்கும் நம் எல்லோருக்கும் இறந்த பின்பு என்ன நிகழும் என்ற கேள்வி அதிகமாகவே இருக்கும். மேலும் நமது உயிர் பிரிந்த பின்பு நாம் எங்கு செல்லப் போகிறோம் என்பது யார் மூலமாவது தெரிந்துவிடாதா என்ற ஏக்கமும் இருக்கும்.

ஒவ்வொரு மதங்களுக்கு இறப்பினைக் குறித்தும், இறப்பிற்கு பின்பு நமது ஆன்மா என்ன செய்கின்றது என்று பல விடயங்களைக் கூறினாலும், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பரலோகம் என்று கூறப்படுகின்றது.

ஆம் பூமியில் நாம் செய்யும் நன்மைகளுக்கு ஏற்ப நாம் பரலோகத்திற்கு செல்லும் வாய்ப்பினை பெறலாம் என்றும், மனிதர்களாகிய இருக்கும் இந்த வாழ்க்கையை விட இறந்த பின்பு மற்றொரு வாழ்க்கை உண்டு என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இறந்த பின்பு நாம் செல்லும் இடம் இதுவரை கண்டிராத இடமாக இருக்கும் என்பது அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரைச் சேர்ந்த டவிட் ஹான்செல் என்பவர் கூறியது தெரியவந்துள்ளது.

கோமா நிலையில் இருந்த நபர்
கடந்த 2015ம் ஆண்டில் செப்சிஸ் மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட டேவிட் ஹான்செல், இரண்டு மாதத்திற்கு கோமா நிலையில் மருத்துவமனையில் இருந்துள்ளாராம்.

அப்பொழுது அவர் கண்களுக்கு தெரிந்த சில நிகழ்வுகள் நம்மை சிலிர்க்க வைத்துள்ளது. ஆம் வெல்வெட் துணி போர்த்தியதைப் போன்று எந்த முடியும், தொடக்கமும் இல்லாத அனுபவம் இருந்துள்ளதாம்.

இறப்பிற்கு பின்பு நடப்பது என்ன?
இதுகுறித்து டேவிட் கூறுகையில், “நான் உடல்நிலை சரியில்லாமல் கண்களை மூடியிருந்த தருணத்தில், இரவு நேர வானில் இருந்ததாகவும், அங்கு தேவதைகள் இருந்ததாகவும்… அங்கிருந்த கட்டிடங்கள் இதுவரை நான் அவதானித்திராத மார்பிள் கற்களால் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அங்கு பறந்து சென்ற மனநிலை தனக்கு தோன்றியதாகவும், பின்பு கோமாவில் இருந்து எழுந்த பின்பு அனைத்து நோய்களும் தன்னைவிட்டு சென்று குணமாகியதாகவும், தனக்கு யாரெல்லாம் கெடுதல் செய்திருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் மன்னிப்பு வழங்கியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது மட்டுமின்றி மதம் குறித்த அனைத்து விடயத்திலும் ஒரு புரிதல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் கூறியது நம்பக்கூடியதாக இல்லையென்று மக்கள் கூறினாலும், நான் அதவானித்த நிகழ்வுகள் எதுவும் பொய் என்று மறுக்கவும் முடியாது… மனிதர்களின் இறப்பிற்கு பின்பு இருக்கும் வாழ்க்கை அமைதியானதாகவும், மிகவும் அழகானதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *