இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கம்!
ஹம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இது குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் கோரியுள்ளது.