காதலி கிடைக்காததால் பல கோடி ரூபா செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபர்!

இளைஞன் ஒருவர் குள்ளமாக இருப்பதால் யாரும் காதலிக்கவில்லை என்று கோடிக்கணக்கில் செலவு செய்து உயரமாக மாறியிருக்கிறார்.

அமெரிக்காவின் மின்னசோட்டாவைச் சேர்ந்த 41 வயதுடைய மோசஸ் கிப்சான் என்ற நபர் தனது உயரத்தை ஐந்து அங்குலங்கள் அதிகரிக்க இரண்டு கால்களை நீளமாக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்த சிகிச்சைக்காக அவர் 1,70,000 டொலர் அதாவது 1.35 கோடி ரூபா செலவிட்டுள்ளார்.

தனது 5 அடி 5 அங்குல உயரம் கொண்ட மோசஸ் கிப்சன், வலிமிகுந்த அறுவை சிகிச்சைக்கு செல்வதற்கு முன், மருந்துகள் முதல் ‘ஆன்மீக குணப்படுத்துபவர்’ வரை உயரமாக வளர முயற்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “நான் என்னைப் பற்றி நன்றாக உணரவில்லை, பெரும்பாலும் என்னுடைய உயரம் குறித்து மகிழ்ச்சியடையவில்லை, இது பொதுவாக எனது தன்னம்பிக்கையை குறைத்ததாக உணர்ந்தேன்.

மற்றும் பெண்களுடன் இது எனது டேட்டிங் வாழ்க்கையை பாதித்தது. நான் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க எனது காலணிகளில் பொருட்களைப் போடுவேன், ஆனால் அது என்னுடையது இல்லை என்று தெரிவித்தார்.

இந்த அறுவைச் சிகிச்சையை செய்துக் கொள்வதற்காக இரவு பகலாக உழைத்திருக்கிறார். பகலில் மென்பொருள் பொறியியலாளராகவும் இரவில் உபர் டிரைவராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றி இந்த பணத்தை சேமித்திருக்கிறார்.

இந்த நபர் 2016ஆம் ஆண்டு முதல் சிகிச்சையை செய்துக் கொண்டார், எனினும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் இரண்டாவது முறையாக இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சிகிச்சையில் தனது உயரத்தை 3 அங்குலம் அதிகமாக சேர்த்து உயரமாக மாறியிருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *