ஹிட்லரால் புகழப்பட்ட மிகவும் ஆபத்தான பெண்மணி!
காலமான எலிசபெத் ராணியாரின் தாயாரான முதலாம் எலிசபெத் ராணியாரையே ஹிட்லர் ஐரோப்பாவிலேயே மிகவும் ஆபத்தான பெண்மணி என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிகவும் ஆபத்தான பெண்மணி
முதலாம் எலிசபெத் ராணியார் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தமது 101வது வயதில் காலமானார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், துணிச்சலான பல முடிவுகளை அவர் எடுத்துள்ளதாக, அவர் தொடர்பில் வெளியாகவிருக்கும் புதிய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ராணியின் புகழ் மற்றும் நாஜி குண்டுவீச்சின் போது அவர் வெளியேற மறுத்தது, பிரித்தானிய மக்களின் மன உறுதிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்ததாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே ஐரோப்பாவிலேயே மிகவும் ஆபத்தான பெண்மணி என ஹிட்லர் குறிப்பிட்டதாக தெரிவிக்கின்றனர். நாஜிக்கள் படையெடுப்பது உறுதி என முடிவான பின்னர் எலிசபெத் ராணியார் பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் கைத்துப்பாக்கி மற்றும் கனரக துப்பாக்கிகளுடன் பயிற்சி எடுத்தார்.
மேலும், நாஜி படையினரால் அப்படி ஒரு நெருக்கடி உருவாகும் என்றால், கொல்லப்படுவதற்கு அல்லது பிடிபடுவதற்கு முன்பு தன்னால் முடிந்தவரை பல நாஜிக்களை கொல்லவும் திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாஜிகளுக்கான சாத்தியமான இலக்கு
இந்த நிலையில், எலிசபெத் மற்றும் மார்கரெட் இளவரசிகள் இருவரும் நாஜிகளுக்கான சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என அறிந்துகொண்ட பிரித்தானிய அரசாங்கம், அவர்களை விரைவில் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று ராணியாரிடம் வாதிட்டுள்ளது.
அனால் அதற்கு அவர் அளித்த பதில் மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படுகிறது. ‘குழந்தைகள் நான் இல்லாமல் எங்கேயும் போக மாட்டார்கள். நான் மன்னரை விட்டு போக மாட்டேன். மன்னர் ஒருபோதும் நாட்டில் இருந்து வெளியேற மாட்டார்’ என ராணியார் எலிசபெத் அப்போது அரசாங்க அதிகாரிகளிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்