ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்

 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அருகில் இருந்து ராக்கெட் ஏவுவதைப் பார்வையிட்டனர்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக வானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ராக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி பிரிக்கத் தவறியதால் நான்கு நிமிடங்களுக்குள் அதன் விண்கலம் வெடித்துச் சிதறியது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ராக்கெட் அதன் சுற்றுப் பாதையை அடைய தவறிவிட்டது.

அத்துடன், முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டிய ராக்கெட், இரண்டாம் கட்டத்தில் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பரபரப்பான துவக்க சோதனை முயற்சிக்காக குழுவை வாழ்த்தியதோடு, இதில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன், சில மாதங்களில் அடுத்த சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.ஓ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *