நிறுவனத்தை திறந்து வைத்த பசுமாடு!
புதிதாக கட்டப்பட்ட கட்டிடமோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் அதை திறந்து வைப்பதற்கு பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அல்லது பிரபலமானவர்களைத்தான் தெரிவு செய்வார்கள்.
ஆனால், பசு மாடு ஒன்று உணவகத்தை திறந்து வைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உணவகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஆர்கானிக் ஒயாசிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகம் முதல் பசுமை உணவகமாகும்.
இந்த உணவகத்தில் பசுமை பொருட்களால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் மாத்திரமே விற்கப்படுகின்றது.
இந்த உணவகத்தை திறந்து வைத்த பசுமாடானது, மஞ்சள் நிற ஆடை அணிந்த நிலையில் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றது.
குறித்த பசுமாட்டை சுற்றியிருப்பவர்கள் கட்டியணைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.