முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டில் நடந்த இப்தார் நிகழ்ச்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இப்தார் விழாவை நடத்தினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏப்ரல் 19, 2023 அன்று இப்தார் விழாவை நடத்தினார்.  இந்நிகழ்வில் பல முக்கிய இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் பக்தர்கள் கலந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகளை பாராட்டினர்.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகளுடன் இப்தார் விழா தொடங்கியது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,

‘இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் இன்று இங்கு வந்துள்ளதையிட்டு நான் பெருமையடைகிறேன். நாம் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து, எமது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், சமாதானத்திற்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் இது ஒரு தருணம்.

“இலங்கையர்கள் அனைவரும் அவர்களின் மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அனைத்து குடிமக்களும் செழித்து வெற்றிபெற சம வாய்ப்புகள் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்றார்

அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் முன்னாள் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இப்தார் விழா சான்றாக அமைந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான எம்.யு.எம். அலி சப்ரி, திரான் அலஸ், விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, மரிஜான் ஃபலீல், எஸ்.எம்.எம்.முஷாரப், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பெருந்தொகையான இஸ்லாமிய பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *