பெண்கள் மூன்று திருமணங்கள் செய்ய அனுமதி!

நடக்கும். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யப்படும்,” என்கிறார், கிராமவாசி மனேம்மா.
இவர் இதுவரை இம்மாதிரியான திருமணங்களை குறைந்தது 20 முறையாவது பார்த்திருப்பார். தற்போது அவர் வீட்டிலேயே ஒரு ஐந்து வயது திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

காதல் திருமணத்திற்கு சம்மதம்
ஐந்து வயது திருமணத்தை நடத்த ஊரின் பெரியோர்கள் ஒரு தேதியை முடிவு செய்கிறார்கள். கிராமத்தில் அனைவரும் ஒப்புக் கொண்டால் முகூர்த்தம் முடிவு செய்யப்படுகிறது. அப்போதிலிருந்து கொண்டாட்டம் தொடங்கிவிடும்.
“இரண்டு திருமணங்களுக்கு பிறகு மூன்றாவதாக மணமகனுடன் செய்யும் திருமணத்தின்போது மாப்பிள்ளையை பெண்கள்தான் தேர்வு செய்கிறார்கள்.

அந்தப் பெண் யாரையாவது விரும்பினால் அவருடன் திருமணம் செய்து வைக்கப்படும். அல்லது பெரியோர்கள் சேர்ந்து ஒரு மணமகனை தேர்ந்தெடுப்பர்,” என பிபிசியிடம் விளக்கினார் செளடப்பள்ளியை சேர்ந்த ஷ்ரவானி. இவர் தான் விரும்பிய விசாகப்பட்டிண மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கும் மூன்று திருமண சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
ஊர்கூடி திருவிழா
மாலிஸ் பழங்குடியினத்தில், ஏழை பணக்காரர்கள் என அனைத்துவிதமான மக்களும் உள்ளனர்.

ஆனால், அனைவரும் இந்த மூன்று திருமண சடங்கை செய்கின்றனர். ஏழை குடும்பம் என்றால் ஊர்கூடி உதவுகின்றனர். மளிகை சாமான்கள் மற்றும் அரிசிகளை வாங்கித்தருகிறார்கள். சிலர் பணமாகவும் பரிசுகளை வழங்குவார்கள். இதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருமணங்கள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன?
முதல் இரு திருமணங்களுக்கு பெண் குழந்தைகளை அலங்கரித்து மரப்பலகையில் அமர வைப்பர். மூன்றாவது திருமணத்தில் சடங்குகள் முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
“திருமண தம்பதிகளுக்கு மாவிலை போன்ற பாஷின்கம் எனப்படும் ஆபரணம் நெற்றியில் கட்டப்படும். பெண்களின் தலையில் கீரிடம் இருக்கும். அலங்காரம் முடிந்தவுடன் அந்த பெண்ணை கிராமம் முழுவதும் தோளில் சுமந்து சுற்றுவர். அதன்பின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொது இடத்திற்கு அவர்களை அழைத்துவருவர். அங்கு அவர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட விரிப்பில் அமர வைக்கப்படுவர். அதன்பின் முறைப்படி ஹோமம் வளர்க்கப்படும். இந்த மூன்று திருமண சடங்கை செய்யவில்லை என்றால் மாலிஸ் கிராமத்தில் குற்றமாக கருதப்படும்,” என்கிறார் மாலிஸ் பழங்குடியின பூசாரி புரோஹித் கிருஷ்ணமூர்த்தி.

முன்னோர்களுக்காக
இம்மாதிரியான சடங்குகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அது முன்னோர்களை அவமதிக்கும் செயல் என பழங்குடியின மக்கள் கருதுகிறார்கள் என்கிறார் ஆந்திரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியல் துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் திருமலா ராவ்.
“மணமகன் இல்லாமல் செய்யப்படும் இரு திருமணங்கள் ஒரு நீண்டகால சடங்கு. அதேபோல, ஒரு பெண் ஒருவரை விரும்பினால் அவருடன் திருமணம் செய்து வைப்பதிலிருந்து இவர்களின் சிந்தனைகள் தெளிவாக உள்ளது என்பதை காட்டுகிறது. அவர்கள் தங்களின் முன்னோர்களை அவமதிக்க விரும்பாமல் முதல் இரு திருமணங்களை செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களின் பெரியோர்களுக்கு கடமையாற்றுவதாக அவர்கள் நினைக்கின்றனர். அதேபோல, பண உதவி வழங்குவது, பொருட்களை வழங்குவது போன்ற ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறைகள் ஒரு பழம்பெரும் சடங்காக உள்ளது. இது ஒரு நல்ல விஷயம்,” என்கிறார் திருமலா ராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *