ஞாபக சக்திக்கு பெயர் பெற்ற அப்துல் ஹமீத் மறந்ததை விழுந்து விழுந்து சிரித்த SPP

ஞாபக சக்திக்கு பெயர் பெற்ற அப்துல் ஹமீது மறந்ததை விழுந்து விழுந்து சிரித்த எஸ்.பி.பி

வானொலி நாடகங்களை தயாரித்துள்ள அப்துல் ஹமீது ஒரு வீடு கோவிலாகிறது என்ற நாடகத்தை தயாரித்ததன் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கனேசனிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் – அப்துல் ஹமீது
90-ஸ் கிட்ஸ் மத்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் பி.எச்.அப்துல் ஹமீது. இலங்கை வானொலியில் தொகுப்பாளாக பணியாற்றிய இவர், தனது சிறப்பான பேச்சாற்றல் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். இலங்கையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இலங்கை வானொலியின் சிறுவர் மலர், மற்றும் இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது 18-ம் வயதில் இலங்கை வானொலியின் தொகுப்பாளராக பணியில் இணைந்துள்ளார். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடன கலைஞர் என பலதுறைகளில் பணியாற்றியுள்ள அப்துல் ஹமீது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய தெனாலி, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான வானொலி நாடகங்களை தயாரித்துள்ள அப்துல் ஹமீது ஒரு வீடு கோவிலாகிறது என்ற நாடகத்தை தயாரித்ததன் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கனேசனிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார். வானொலியின் மூலம் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரரான அப்துல் ஹமீது இலங்கை மட்டுமல்லாமல் இந்தியாவிலும் புகழ் பெற்றவர். இவரின் நிகழ்ச்சிகள இந்திய தொலைக்காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பிய காலங்களும் உண்டு.

இத்தகைய பெருமை பெற்றுள்ள அப்துல் ஹமீது ஞாபக சக்திக்கு பெயர் பெற்றவர். இவரின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் எந்த பாடல் பாடினாலும் அதில் இருக்கும் குறைகளை சரியான கண்டுபிடித்து சொல்லும் திறன் கொண்ட அப்துல் ஹமீதின் ஞாபக சக்தியை நடிகர் கமல்ஹாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

இத்தனை பெருமை இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போலா ஒரு இக்கட்டாச சூழலில் தான் மறந்த ஒரு விஷயம் குறித்து அப்துல் ஹமீது பேசியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் எத்தனையோ பாடல் பாடுவார்கள் அதில் நடுவில் எதாவது தவறு இருந்தால் உடனடியாக நிறுத்தி தவறை சரி செய்வீாகள் இந்த ஞாபக சக்தி உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்கிறார்கள்.

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அப்துல் ஹமீது, ஒரு மனிதனால் செய்யக்கூடிய மிகவும் இலகுவான காரியம் மற்றவன் செய்யும் பிழைகளை கண்டுபிடிப்பது தான் என்று கூறியுள்ளார். எப்போதாவது நானே பாட வேண்டிய சூழல் வந்தால் அப்போது தெரியும் என் ஞாபக சக்தி என்ன வென்று என்று கூறும் அப்துல் ஹமீது தனது ஞாபக மறதி குறித்து ஒரு கதையை சொல்கிறார்.

ஒருமுறை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பேட்டி எடுக்க என்னை அழைத்தார்கள். நானும் சரி என்று கிளம்பி போனேன். அப்போது  சரியான மழை ரோடு எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை. நான் எனது வாகனத்தில் போய்க்கொண்டிருக்கிறேன். அப்போது தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வருகிறது. மழை அதிகமாக இருக்கிறது. எங்கள் காரை அலுவலகத்திற்கு உள்ளே நிறுத்த செக்யூரிட்டியிடம் சொல்ல வேண்டும் கார் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

அந்த நேரம் பார்த்து கார் நம்பர் எனக்கு மறந்துபோய்விட்டது. அதனால் அந்த மழையில் நனைந்துகொண்டே காரின் நம்பரை பார்க்கிறேன். அப்போது அருகில் எஸ்பி.பி கார் வந்து நிற்கிறது. என்ன அப்துல் என்ன பார்க்குறீங்க என்று கேட்கிறார். கார் நம்பர் மறந்தவிட்டது அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். அங்கு சிரிக்க தொடங்கியவர்தான் நேர்காணலிலும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *