இலவச உணவுக்காக குவிந்த மக்கள் 80 பேர் பலி!

ஏமன் நாட்டில் நிதி உதவி விநியோகிக்கும் நிகழ்வில் 80 பேர் பலியாகியுள்ளனர். 

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி இவ்வாறு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் வசிக்கும் பல மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில்,  ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து நிதி உதவி மற்றும் இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

பலரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மேலும். இந்த சம்பவம் தொடர்பாக  நிகழ்வை ஏற்பாடு செய்த இரு வணிகர்களை கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹூதிகளால் நடத்தப்படும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வீடியோவில் ” ஒரு பெரிய வளாகத்தின் தரையில் உடல்கள் கிடப்பதைக் காட்டியது, மக்கள் அவர்களைச் சுற்றி கூச்சலிட்டனர்”. இலவச உணவுக்காக குவிந்த மக்கள் கூட்டத்தில் 80 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *