நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகை ஐஸ்வர்யாவின் மகள்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் 12 வயது மகளான ஆராத்யா, அவதூறு கிளப்பும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராத்யா உடல்நிலை சரியில்லை என்றும், அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் சேனலைச் சேர்ந்த பலரும் அவதூறு பரப்பி வந்தனர்.

இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் எனவும் ஆராத்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *