LocalSports

இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி!

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தனது 1 வது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அயர்லாந்து அணி சார்பில் Lorcan Tucker 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது 2 வது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் அடிப்படையில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading