4 வருடங்கள் பிரபுவுடன் குஷ்பூ வாழ்ந்ததாக பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

4 வருஷங்களாக பிரபுவுடன் குஷ்பு வாழ்ந்தார் என்று பல ரகசியத்தை பிரபல நடிகை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக பிரபு வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாவார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான ‘சின்னத் தம்பி’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.

ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் குஷ்பூவையும், நடிகர் பிரபுவையும் இணைத்து ரசிகர்கள் ரசித்தனர். அந்த அளவிற்கு இவர்களின் இருவரிடம் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி வேலை செய்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பிரபல தெலுங்கு நடிகையான காக்கிநாடா ஷியாமளா நடிகை குஷ்பு நடிகர் பிரபு இடையேயான உறவு குறித்து பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், நடிகை குஷ்பு, நடிகர் பிரபுவுடன் 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ‘குஷ்பு மிகவும் நல்ல பெண். குஷ்புவும், பிரபுவும் ஒருவரை ஒருவர் ரொம்ப ஆழமாக நேசித்தனர்.

இதன் பின்னர், இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களது உறவுக்கு நடிகர் பிரபுவின் மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லை. இவர்களின் திருமணம் பிரபுவின் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, இருவரும் பிரிந்தனர். நடிகர் பிரபுவை பிரிந்த பிறகு நடிகை குஷ்பு மன உளைச்சலுக்கு ஆளானார்.

நடிகர் பிரபுவுடனான தனது உறவு குறித்து நடிகை குஷ்புவே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். 4 வருடங்களாக பிரபுவுடன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவும், பிரவும் 1993ம் ஆண்டு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பிரபு ஏற்கனவே திருமணமானவர்.

இதனால், அவரது தந்தை சிவாஜி கணேசன் இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எது எப்படியோ.. அது இப்போது நல்லாதாக மாறியுள்ளது. நடிகை குஷ்பு நல்ல இயக்குனரை திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *