சிலுவையில் அறைவது முதன்முதலில் எங்கு எப்போது தோன்றியது!

சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர் இயேசு கிறிஸ்து ஆவார். ஆனால் இந்த கொடூரமான தண்டனை அவர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது.

பண்டைய காலத்தில் ஒருவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட மூன்று வழிகளில் சிலுவையில் அறைவது மிக கொடூரமானதாக கருதப்பட்டது என்கிறார் எழுத்தாளரும் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஃப்ரீ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு பேராசிரியருமான லூயிசி சில்லியர்ஸ்.

“அதன்பிறகு எரித்து கொல்லப்படுவதும் தலையை வெட்டி கொல்லப்படுவதும் வருகிறது” என்கிறார் அவர்.

“அது கொடூரமான முறை மட்டுமல்ல பார்வையாளர்கள் மத்தியில் பயங்கரத்தை விதைக்கும் செயலாகவும் இருந்தது” என்கிறார் ஸ்பெயினில் உள்ள நவாரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீகோ பெரஸ் கோண்டர்.

பல தருணங்களில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் பல நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளனர்.

சரி இந்த சிலுவையில் அறைதல் முதலில் எங்கு எப்போது தோன்றியது என பார்ப்போம்.

கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகள் முன்பு
சிலுவையில் அறைதல் முதன்முதலில் அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் காலத்தில் உருவானதாக இருக்கலாம் என பேராசிரியர் சிலியர்ஸ் நம்புகிறார்

சிலுவையில் அறைதல் முதன்முதலில் அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் காலத்தில் உருவானதாக இருக்கலாம் என பேராசிரியர் சிலியர்ஸ் நம்புகிறார்

இந்த சிலுவையில் அறைதல் முதன்முதலில் அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் காலத்தில் உருவானதாக இருக்கலாம் என பேராசிரியர் சிலியர்ஸ் நம்புகிறார். இந்த இரு பெரும் நாகரிகங்கள்தான் தற்போது மத்திய கிழக்கு பகுதியாக உள்ளது.

அசிரியர்களின் அரண்மனை அலங்காரங்களில் சிலுவை அறைதல் பற்றிய குறிப்புகளை காணலாம் என பேராசிரியர் பெரெஸ் கூறுகிறார்.

“போர் மற்றும் ஆக்கிரமிப்புகளை காட்சிப் படுத்தும் ஓவியங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவது சிலுவையில் அறைவதை ஒத்தது போல இருக்கும்” என்கிறார் அவர்.

“கிமு ஆறாம் நூற்றாண்டில் சிலுவையில் அறைதல் பாரசீகர்களால் பல்வேறு முறைகளில் கடைப்பிடிக்கப்பட்டது,” என்கிறார் சிலியர்ஸ்

சிலுவையில் அறைதலுக்கான வரலாறு மற்றும் நோயியல் குறித்து சிலியர்ஸ் எழுதிய கட்டுரை தென் ஆப்ரிக்காவின் மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

அவர் பாரசீகர்கள், சிலுவையில் அறைதலுக்கு மரங்கள் மற்றும் கம்புகளை பயன்படுத்தியதாக கூறுகிறார்.

“மரத்தில் கட்டி அப்படியே விட்டுவிட்டால் அவர்கள் மூச்சு முட்டி அல்லது எந்த வலுவும் இல்லாமல் இறந்து போவார்கள்” என்கிறார் பேராசிரியர் பெரேஸ்.

அலெக்சாண்டர் காலத்தில்
கிமு நான்காம் நூற்றாண்டில் மாமன்னர் அலெக்சாண்டர் இந்த தண்டனையை மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்கு நாடுகளுக்குள் கொண்டு வந்தார்.

“அலெக்சாண்டர் மற்றும் அவரின் படைகள் டைர் என்ற நகரத்தை முற்றுகையிட்டனர். இது தற்போது லபெனான் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அவர்கள் அங்கிருந்த 2000 பேரை சிலுவையில் அறைந்தனர்,” என்கிறார் சில்லியர்ஸ்

அலெக்சாண்டரின் வழி வந்தவர்கள் இந்த தண்டனையை எகிப்து, சிரியா மற்றும் ஃபோனிசியர்களால் கண்டறியப்பட்ட வடக்கு ஆப்ரிக்க நகரமான கார்தேஜ்ஜிற்கு கொண்டு சென்றனர்.

பியூனிக் போரின் (264-146BC), போது ரோமானியர்கள் இதை கற்றுக் கொண்டு “500 வருடங்களில் அதை நேர்த்தியாக செய்ய தொடங்கினர்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

“ரோமானியர்கள் தாங்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சிலுவையில் அறைவதை கடைப்பிடித்தனர்.” என்கிறார் அவர்.

கிபி ஒன்பதாம் ஆண்டில் ஜெர்மானிய ஜெனரல் ஆர்மினியஸ், டிடுபர்க் காடுகள் போரில் வெற்றி பெற்றபின் ரோமானிய சிப்பாய்களை சிலுவையில் அறைய உத்தரவிட்டார். இது ஜெர்மனிய பழங்குடிகளுக்கு எதிரான ரோமானியர்கள் பெற்ற அவமானகரமான தோல்வியை குறிப்பதாக இருந்தது.

கிபி 60ஆம் ஆண்டில் ஐசினி என்னும் பிரிட்டன் பழங்குடியின ராணியான பெளடிக்கா, ஒரு பெரும் கலவரத்திற்கு தலைமை தாங்கி ரோமானியர்கள் மீது படையெடுத்து சென்றார். அச்சமயம் பல படை வீரர்கள் சிலுவையில் அறையப்பட்டனர்.

புனித நிலம்

ரோமானியர்கள் இயேசுவுக்கு முன்பாக சிலுவையில் அறைவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர் என்கிறார் சில்லியர்ஸ்
ரோமானியர்கள் இயேசுவுக்கு முன்பாக சிலுவையில் அறைவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர் என்கிறார் சில்லியர்ஸ்

பழம்பெரும் இஸ்ரேலில் இந்த வகையான தண்டனை ரோமானியர்களின் வருகைக்கு முன்னதாகவே இருந்தது.

“இஸ்ரேலை ரோமானியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பாகவே சிலுவையில் அறைதல் இருந்தது என்பதை பேசுவதற்கு ஆட்கள் உள்ளனர்,” என்கிறார் பேராசிரியர் பெரேஸ்.

அதில் ஒருவர் ரோமானிய – யூத வரலாற்றாசிரியர், அரசியல்வாதி மற்றும் சிப்பாய் ஃப்ளேவியஸ் ஜோசஃபஸ். இவர் கிபி முதலாம் நூற்றாண்டில் ஜெருசலத்தில் பிறந்தவர்.

அவர், யூதர்களை ஆண்ட அலெக்சாண்டர் ஜன்னஸ், கிமு 88ஆம் ஆண்டில் யூதர்களை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கிறார்

ரோமானிய – யூத வரலாற்றாசிரியர், அரசியல்வாதி மற்றும் சிப்பாய் ஃப்ளேவியஸ் ஜோசஃபஸ்

ஆனால் ரோமனியர்கள்தான் இந்த முறை தண்டனைக்கு வெவ்வேறு விதமான சிலுவையை உருவாக்கியதாக சில்லியர்ஸ் கூறுகிறார்.

“பல சமயங்களில் அவர்கள் ‘T’ வடிவிலான சிலுவையை பயன்படுத்தினர்.. தண்டனைக்குரிய நபர்களின் பின்புறம் கிடைமட்டமாக இந்த சிலுவை கட்டப்பட்டு கைகளை இருப்பக்கத்தில் நீண்டிருக்கும் சிலுவையில் கட்டுவர். அவர்கள் சிலுவையின் கிடைமட்ட பகுதியை தண்டனை நடைபெறும் இடம் வரை தூக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் சில்லியர்ஸ்.

பொதுவாக உள்ளங்கையில் ஆணி அடிக்கமாட்டார்கள் அது உடலின் எடையை தாங்காது. மணிக்கட்டு அல்லது முன் கை எலும்புகளில் ஆணி அடிப்பார்கள். அந்த ஆணிகள் 18 செமீ நீளமும் ஒரு செமீ அளவு கணமும் இருக்கும்.

சிலுவையின் கிடைமட்ட கம்பில் தண்டனைக்குரிய நபரை கட்டி வைத்து பின் ஏற்கனவே செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் கட்டையில் பொறுத்துவார்கள்.

இதில் சில சமயங்களில் கால்கள் இரண்டும் சேர்த்து ஆணி அடிக்கப்பட்டிருக்கும்.

வலியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. “பல்வேறு நரம்புகள் பாதிப்படையும்” என்கிறார் பேராசிரியர் பெரேஸ்.

பல சமயங்கள் பல்வேறு உறுப்புகள் செயலிழந்து இறப்பு மெதுவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

பலர் அதிகப்படியான ரத்தப் போக்கால் உயிரிழப்பர். சிலர் மூச்சுத் திணறியும் உயிழக்ககூடும்.

சிலுவையில் அறைதலை பொறுத்தவரை சட்டென்று மரணம் ஏற்படாது. அதுதான் மிகுந்த வலியை கொடுக்கும். பைபிளில் இயேசு ஆறு மணி நேரம் உயிர்பிழைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

“சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்” – ராகுலின் பேச்சை கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

மோசமான எதிரிகளுக்கு
சிலுவையில் அறைதல் என்பது மிக மோசமான எதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தண்டனையாக இருந்தது. அதாவது ரோமானியர்கள் இதுபோல மீண்டும் யாரும் இதுபோல செய்யக் கூடாது என்று கருதும் குற்றங்களுக்கு இந்த தண்டனையை வழங்கினர்.

பொதுவாக அடிமைகள், வெளிநாட்டு நபர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது அரிதாக ரோமானிய குடிமக்களுக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

பல சமயங்களில் தேச துரோகம், ராணுவக் கலகம், பயங்கரவாத மற்றும் சில குற்றங்களுக்காக சிலுவையில் அறையும் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த கண்ணோட்டத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை கவனிக்க வேண்டும்.

“அவர்கள் இயேசுவை தங்களுக்கான ஆபத்தாக உணர்ந்தார்கள்” என்கிறார் பெரெஸ்

உலகம் மாறுவதை விரும்பாதவர்கள் அவருக்கு முடிவு கட்ட விரும்பினர். ஆனால் அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தது மூலம் இம்மாதிரியாக யாரும் தொடரக் கூடாது என்பதை சொல்ல முயற்சித்தனர்.

ரோமானிய பேரரசர் முதலாம் கான்ஸ்டண்டைன் கிபி நான்காம் நூற்றாண்டில் இந்த சிலுவையில் அறைதல் முறையை ஒழித்து கிறிஸ்துவத்தை தழுவினார். கிறிஸ்துவத்தை தழுவிய முதல் ரோமானிய பேரரசர் அவர்.

மேலும் கிறிஸ்துவத்தை அவர் சட்டப்பூர்வமானதாக மாற்றினார்.

இருப்பினும் அந்த தண்டனை பிற நாடுகளில் வழங்கப்பட்டது. 1597ஆம் ஆண்டில் ஜப்பானில் 26 மிஷினரி உறுப்பினர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். ஜப்பானியர்கள் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான காலத்தின் தொடக்கம் அது.

இம்மாதிரியான கொடூரமான கடந்த காலங்களை கொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கு, அன்பின் பெயரில் செய்யப்படும் தியாகத்தின் சின்னமாக சிலுவை விளங்குகிறது.

நன்றி; பிபிசி தமிழ்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *