செல்வந்தர்களின் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் எலோன் மாஸ்க்!

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த செல்வந்தர் எலோன் மஸ்க் தற்போது அந்த நிலையை இழந்துவிட்டதாக Forbes குறிப்பிட்டது.

Tesla, Twitter ஆகிய நிறுவனங்களின் தலைவரான அவர் இப்போது உலகின் இரண்டாம் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அவருடைய மொத்தச் செல்வத்தின் மதிப்பு… 180 பில்லியன் டாலர்… சென்ற ஆண்டைவிட 39 பில்லியன் டொலர் குறைவாகும்.

முதலிடம் பிரான்ஸ் சொகுசுப்பொருள் நிறுவனமான LVHMஇன் தலைவர் பெர்னர்ட் ஆர்னால்ட்டுக்குச் (Bernard Arnault) சென்றது. அவரது செல்வத்தின் மதிப்பு 211 பில்லியன் டொலராகும்.

இந்நிலையில் செல்வந்தர் மஸ்க் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுவது எதிர்பார்க்கப்பட்டது தான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் சென்ற ஆண்டு Twitter தளத்தை வாங்கியபோது தமது செல்வத்திலிருந்து 44 பில்லியன் டொலரை அளிக்கவேண்டி இருந்தது.

Tesla பங்குகளைப் பயன்படுத்தி அவர் பணம் திரட்டியதால் முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டனர். அதன் காரணமாக Teslaவின் பங்குகளின் மதிப்பும் பெரிய அளவில் இறக்கம் கண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *