இரவு நேரங்களில் நாய் துரத்தும் போது எப்படி தப்புவது?

இரவு நேரம் நீங்கள் சினிமாவிற்கு போய் வந்தாலும் சரி வேலை முடிந்து வந்தாலும் சரி நீங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை நாய் தொல்லைகள் தான். மெயின் ரோடுகளில் இல்லை என்றாலும் நாடு முழுவதும் இரவு நேரங்களில் வீதிகளை கட்டி ஆள்வது நாய்கள் தான். இரவு நேரத்தில் பைக்கில் வீட்டிற்குச் செல்பவர் நாய் துரத்தாமல் செல்லவே முடியாது.

இது பைக்கில் செல்பவர்களுக்கு மட்டுமல்ல சைக்கிளில் செல்பவர்களுக்கும் இருக்கும். பெரும்பாலும் சைக்கிள், பைக்கில் செல்பவர்களைத் தான் நாய் துரத்தும் இப்படியாக நாய் துரத்தும் போது எப்படித் தப்பிப்பது என்று தான் இங்குக் காணப்போகிறோம்.

கண்டு கொள்ளாமல் விடுவது! பலருக்கு பைக்கில் செல்லும் போது நாய்கள் குரைத்துக்கொண்டே துரத்தினால் தங்களைத் தான் துரத்துகிறது என நினைப்பார்கள். ஆனால் நாய்கள் நம் வாகனத்தின் சக்கரம் சுழல்வதைப் பார்த்துக் குறைக்கிறது. அதனால் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி சென்றால் எந்த ஆபத்து கிடையாது. ஆனால் பயத்தில் வேகமாகப் போய் எதிலாவது மோதிக்கொள்ளாதீர்கள்.

வாகனத்தை நிறுத்துவது: சிலருக்குத் தொடர்ந்து நாய் துரத்தி வருவது பயமாக இருக்கும் அல்லது அந்த நாய் மிக மூர்க்கமாக வகையில் குரைத்துக்கொண்டிருக்கும். இப்படியான நேரங்களில் முதலில் நம் மனதில் பயம் வந்துவிட்டால் வாகனத்தை நிறுத்துவது தான் உத்தமம். வாகனம் நிறுத்தப்பட்டால் வீல் சுற்றுவது நின்று நாய் குரைப்பதையும் நிறுத்திவிடும்.

தண்ணீர் தெளிப்பது: சரி வாகனத்தை நிறுத்திவிட்டால் நாய் சென்று விடுமா என்றால் இல்லை. நாயும் நிற்கும், நீங்களும் நிற்பீர்கள், பின்னர் நாயை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் நாம் ஈடுபட வேண்டும். பலர் பைக்கில் தண்ணீர் வைத்திருப்பீர்கள். அதை எடுத்து நாயின் மீது தெளித்தால் கூட அங்கிருந்து ஓடி விடும். சில நாயைப் பயம் காட்டினால் அங்கிருந்து ஓடிவிடும்.

அல்ட்ராசோனிக் விசில்: மார்கெட்டில் அலட்ராசோனிக் விசில் விற்பனையாகிறது. இந்த வீசிலை நீங்கள் இரவில் வரும்போது கை வசம் வைத்திருந்தால் அதை எடுத்து ஊதினால் அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டு நாய்கள் தெறித்து ஓடும். அந்த சத்தம் நாய்களுக்குத் தொந்தரவாக இருக்கும். அதைப் பயன்படுத்தி நாய்களை விரட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *