இராணுவ பெண் மருத்துவர்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தும் ரஷ்ய இராணுவ வீரர்கள்!

உக்ரைனில் உள்ள ரஷ்ய இராணுவ பெண் மருத்துவர்கள், வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக மாற கட்டாயப்படுத்த படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ரஷ்ய இராணுவம் பல்வேறு போர் குற்றங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றன.

போர் களத்தில் டஜன் கணக்கான பொதுமக்களை கொன்று புதைத்தது, உக்ரைனிய பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை செய்தது, மற்றும் உக்ரைனிய குழந்தைகளை நாடு கடத்தியது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சமீபத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் இருந்து சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தியதற்காக போர் தாக்குதல் பொறுப்பாளியான ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய உத்தரவிட்டது.

ரஷ்ய இராணுவ பெண் மருத்துவர்கள்
இந்நிலையில் முன்கள வரிசையில் பணிபுரியும் ரஷ்ய பெண் மருத்துவர்கள் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பாலியல் அடிமைகளாக மாற நிர்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ ரேடியோ லிபர்டி என்ற ஒளிபரப்பாளர் இது தொடர்பான நேர்காணல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “களத்து மனைவிகளாக”(field wives) மாறியவர்கள், சமைக்கவும், சுத்தம் செய்யவும், அதிகாரிகளுடன் உடலுறவு கொள்ளவும் கட்டாயப்படுத்தபட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் அடிமைகளாக இருக்க மறுப்பவர்கள் கடுமையான தண்டனை மற்றும் அடிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு பெண் மருத்துவர்கள் பாலியல் முன்னேற்றங்களை மறுத்த போது, அந்த அதிகாரிகள் அவர்களது படைவீரர்களிடம் அவளுக்கு வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும்படி கட்டளையிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *