15 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்தை மாற்றிய Pepsi

 

Pepsi நிறுவனம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்தை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, நேற்றைய தினம் அதன் பிரபல பானத்திற்கான சின்னத்தை மாற்றியிருக்கின்றது.

வட்டத்திற்குள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்கள், அதன் கீழே Pepsi என்ற சொல் என இதுவரை காணப்பட்டது. 2008ஆம் ஆண்டிலிருந்து அதுவே அதன் பானத்தின் சின்னமாக இருந்து வருகிறது.

புதிய சின்னத்தில் Pepsi என்ற சொல் வட்டத்திற்கு உள்ளே சென்றுவிட்டது.

அதில் இடம்பெற்றிருக்கும் புதிய எழுத்து வடிவமும் வடிவமைப்பும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பிரதிபலிப்பதாக நிறுவனத்தின் தலைமை விற்பனை, விளம்பர அதிகாரி தெரிவித்துள்ளார்.

1990களில் இருந்த அதன் சின்னம்போல் புதியது இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் புதிய zero sugar என்கிற சர்க்கரை இல்லாத ரக Pepsi பானங்களைப் பிரபலப்படுத்துவதற்காகச் சின்னம் மாற்றம் கண்டுள்ளது.

புதிய சின்னம் இந்த ஆண்டு பிற்பகுதியில் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு அது உலகம் முழுவதும் வெளியிடப்படும்.

Pepsi பானம் விற்பனைக்கு வந்து சுமார் 125 ஆண்டுகளாகும் வேளையில் அதன் சின்னம் பலமுறை மாற்றப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *