துர்நாற்றத்தை நுகர்ந்தால் நன்மை – சுவீடன் ஆய்வாளர்கள் தகவல்!

 

பொதுவாக ஒருவரிடமிருந்து துர்நாற்றம் வீசினால் சிலர் சற்றுத் தள்ளி நிற்கும் போதிலும், அந்தத் துர்நாற்றத்தை நுகர்ந்தால் பயன் கிடைக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்… தங்களைப் பற்றி எதிர்மறையாக எண்ணுவார்களா என்று social anxiety எனும் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் இதன் மூலம் பயனடையலாம் என்று சுவீடன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துர்நாற்றத்தை நுகரும்போது உணர்வுகளுக்குத் தொடர்புடைய மூளை செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். மனத்துக்கு அமைதியைத் தரக்கூடிய பலன் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதற்கான சோதனைகள் தற்போது நடத்தப்படுகின்றன.

திகில் அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய திரைப்படத்தைப் பார்த்த தொண்டூழியர்கள் சிலரிடமிருந்து வேர்வை மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இரு வகைத் திரைப்படங்களையும் பார்த்தோரின் துர்நாற்றத்தை நுகரும்போது social anxiety பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் பயன்பெறுவதாக முதற்கட்டச் சோதனையில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *