கொசுக்கடியால் கை, கால்களை இழந்த நடனக் கலைஞர்

 

பிரித்தானியாவை சேர்ந்த நடனக்கலைஞர் ஒருவரை கொசு கடித்ததால் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவிற்குப் பாதிப்புக்களை சந்தித்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொசுக்கடியால் வந்த நோய்
கொசுவினால் வாழ்க்கை பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் ஒரு பிரிட்டிஷ் பெண் நடனக் கலைஞருக்கு நேர்ந்துள்ளது. ஒரு முறை பெண் நடனக் கலைஞரை கொசு கடித்ததால், முதலில் அவருக்கு லேசான நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மலேரியாவாக மாறியுள்ளது.

மலேரியாவை குணப்படுத்த, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது வாழ்க்கையின் மோசமான நாட்களை சந்தித்துள்ளார்.

மலேரியா நோய்க்கான சிகிச்சையின் போது, ​​அந்த பெண்ணின் உடலில் சில எதிர்விளைவுகள் ஏற்பட்டு, மேலும் நோய்வாய்ப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது.

லண்டனில் உள்ள கேம்பர்வெல்லில் வசிக்கும் இந்த பெண் நடனக் கலைஞரின் பெயர் டாடியானா டிமோன் (Tatiana Timon) எனவும், சில நாட்களுக்கு முன் விடுமுறைக்கு சென்றிருந்த அவருக்குக் கொசுக்கடியால் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது நோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. சிகிச்சையின் போது சிறிது காலம் கோமா நிலையிலிருந்திருக்கிறார்.

மயக்க நிலையிலிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நடனக் கலைஞரின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததே தவிர அவர் தனது கை கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கை, கால்கள் இழப்பு

கடைசியில் நோய்த்தொற்று அதிகரித்ததையடுத்து அவரது இரு கால்களையும் கைகளையும் துண்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கோவிட் காலத்தில் முதல் முறையாக நோயை அனுபவித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தபோது, ​​அவருக்கு மலேரியா இருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு அதிகரித்தது. தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், உடல் உறுப்புகளை இழந்ததாலும் தன் வாழ்வை முன் நகர்த்தி செல்லும் திட்டங்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டுள்ளார்.

வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவது முதல் மற்றும் தனக்காக சமைப்பது போன்ற தினசரி பணிகளைச் செய்ய டாடியானா இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் தனது எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்ள வேண்டும் எனும் முனைப்பில் உள்ளார்.

“நான் எப்பொழுதும் நேர்மறையாக இருக்கிறேன், எதையும் நகைச்சுவையாக மாற்ற முயல்கிறேன். எனது மன அழுத்தத்தை நான் விரும்பாததால், எதிர்மறையான விஷயத்தை என் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நேர்மறையான விஷயமாக மாற்ற முடியும்.” என புன்னகையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *