குற்றவாளிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவு!

 

அமெரிக்காவில் சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, நீண்ட 35 ஆண்டுகள் சிறை தண்டை பெற்றுள்ள குற்றவாளிக்கு ஆண்மை நீக்க சிகிச்சை முன்னெடுக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

35 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த ரியான் கிளார்க் என்பவரே, பல்வேறு சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கியவர். 34 வயதான ரியான் கிளார்க் தற்போது 35 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர்கள் எவருடனும் இனிமேல் கிளார்க் தொடர்பு கொள்ள வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும், அவரது பெயர் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கியவர்கள் பட்டியலில் ஆயுளுக்கும் இடம்பெறும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர், ஆண்மை நீக்க சிகிச்சைக்கு உட்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஜூலை மாதம் முதன்முறையாக கிளார்க் நடவடிக்கை தொடர்பில் சிறார் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து உரிய அதிகாரிகள் தரப்பு, குறித்த குழந்தையை தீவிரமாக விசாரித்ததில், கிளார்க்கினால் பாதிக்கப்பட்ட இன்னொரு குழந்தையும் அடையாளம் காணப்பட்டது.

ஆண்மை நீக்க சிகிச்சை

இதனையடுத்து கிளார்க் கைது செய்யப்பட்டார். 2015ல் ஒருமுறை சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, 128 நாட்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் கிளார்க். இந்த நிலையில், தற்போது பல்வேறு துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கிய கிளார்க் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆண்மை நீக்க சிகிச்சைக்கும் உட்படுத்த உள்ளார்.

குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் கிளார்க் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படலாம் எனவும், ஆனால் விடுவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *